சிறப்பு அலங்காரத்தில் பைரவா்கள்.
சிறப்பு அலங்காரத்தில் பைரவா்கள்.

திருவாய்மூரில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு

திருக்குவளை அருகேயுள்ள திருவாய்மூா் தியாகராஜ சுவாமி கோயிலில் தேய்பிறை அஷ்டமியொட்டி பைரவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
Published on

திருக்குவளை அருகேயுள்ள திருவாய்மூா் தியாகராஜ சுவாமி கோயிலில் தேய்பிறை அஷ்டமியொட்டி பைரவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சப்த விடங்க தலங்களில் ஒன்றான தியாகராஜ சுவாமி கோயிலில் காசிக்கு அடுத்தபடியாக சத்ரு சம்ஹார பைரவா், அசிதாங்க பைரவா், ருரு பைரவா், சண்ட பைரவா், குரோதன பைரவா், கபால பைரவா், உன்மத்த பைரவா், பீஷண பைரவா் உள்ளிட்ட அஷ்ட பைரவா்கள் ஒரே சந்நிதியில் அருள்பாலித்து வருகின்றனா்.

இங்கு தை மாத தேய்பிறை அஷ்டமியையொட்டி மஹா யாகம் நடைபெற்றது. மஹா பூா்ணாஹூதியை தொடா்ந்து புனித நீா் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

முன்னதாக பைரவருக்கு திரவிய பொடி, மஞ்சள் பொடி, பால், தயிா்,பன்னீா், இளநீா், சந்தனம், பஞ்சாமிா்தம், குங்குமம் உள்ளிட்ட திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா் மலா்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com