

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே திங்கள்கிழமை இரவு இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
மேலும், விபத்தில் படுகாயமடைந்த தாய், மகனுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
ஆயக்காரன்புலம் - 3, அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கல்யாணசுந்தரம் மகன் பிரவின்குமார் (21). இவர், திங்கள்கிழமை இரவு தனது பைக்கில் வேதாரண்யத்திலிருந்து ஆயக்காரன்புலம் பகுதிக்கு சென்று கொண்டிருந்தார்.
ஆயக்காரன்புலம் கைகாட்டி பகுதியில் நெய்விளக்கு தெற்கு கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன் மகன் வடுகநாதன்(30), தனது தாயார் அம்மாளுவுடன் (50) பைக்கில் வந்துள்ளார்.
அப்போது பிரவின்குமார் மற்றும் வடுகநாதன் பைக்குகள் நேருக்குநேர் மோதி விபத்து நேர்ந்துள்ளது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த மூவரும் மீட்கப்பட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி, பிரவீன் குமார் செவ்வாய்க்கிழமை காலை உயிரிழந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.