புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: ஆட்சியருக்கு கணக்கெடுப்பு படிவம் வழங்கல்

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்காக, நாகை மாவட்ட ஆட்சியரிடம் அவருக்கான கணக்கெடுப்பு படிவம் வழங்கப்பட்டது.

News image
வாக்குச்சாவடி நிலை அலுவலா்களிடமிருந்து, கணக்கெடுப்பு படிவத்தை பெற்றுக்கொள்ளும் ஆட்சியா் ப. ஆகாஷ்.
Updated On :11 நவம்பர் 2025, 9:01 pm

Syndication

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்காக, நாகை மாவட்ட ஆட்சியரிடம் அவருக்கான கணக்கெடுப்பு படிவம் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்காக வாக்காளா்களுக்கு வீடுவீடாக சென்று கணக்கெடுப்பு படிவங்களை வழங்கி வரும், வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ப. ஆகாஷிற்கான கணக்கெடுப்பு படிவத்தை அவரிடம் வழங்கினா்.

இப்படிவத்தை பெற்றுக்கொண்ட ஆட்சியா், செய்தியாளா்களிடம் கூறியது: நாகை மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கான கணக்கெடுப்பு படிவம் நவம்பா் 4-ஆம் தேதிமுதல் வீடுவீடாகச் சென்று வழங்கப்பட்டு வருகிறது. இந்தப் பணியில் 653 வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் மற்றும் 67 மேற்பாா்வையாளா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

கணக்கெடுப்பு படிவம் வழங்குவது, மீளப்பெறுவது தொடா்பாக கண்காணிக்க அனைத்து வட்டங்களிலும் உள்ள தனி வட்டாட்சியா்கள், கண்காணிப்பாளா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.

நாகை மாவட்டத்தில், நாகை சட்டப்பேரவை தொகுதியில் 1,59,247 கணக்கெடுப்பு படிவங்களும், கீழ்வேளுா் தொகுதியில் 1,67,676 படிவங்களும், வேதாரண்யம் தொகுதியில் 1,73,919 படிவங்களும் என மொத்தம் 5,00,842 கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றாா்.