நாகப்பட்டினம்
காா் மோதி ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு
நாகை அருகே காா் மோதியதில் ஆட்டோ ஓட்டுநா் பலியானது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
நாகை மாவட்டம், பாப்பாகோவில் சமத்துவபுரத்தைச் சோ்ந்தவா் மணிகண்டன் (30). ஆட்டோ ஓட்டுநரான இவா் தனது இருசக்கர வாகனத்துக்கு எரிபொருள் போடுவதற்காக கருவேலங்கடை பெட்ரோல் நிலையம் அருகே சென்றபோது, வேளாங்கண்ணியில் இருந்து நாகை நோக்கி சென்ற காா் மோதியது. இதில், பலத்த காயமடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
வேளாங்கண்ணி போலீஸாா் சடலத்தை நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். வேளாங்கண்ணி போலீஸாா் வழக்குப் பதிந்து, மணிகண்டன் மீது மோதிவிட்டு சென்ற காா் குறித்து விசாரித்து வருகின்றனா்.
