வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

மேல்மருவத்தூரில் விரைவு ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை

தைப்பூச இருமுடி திருவிழாவையொட்டி மேல்மருவத்தூரில் விரைவு ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :18 நவம்பர் 2025, 9:47 pm

Syndication

தைப்பூச இருமுடி திருவிழாவையொட்டி மேல்மருவத்தூரில் விரைவு ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலா் ஆா். வினோத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீடத்தில் டிச.14-ஆம் தேதி முதல் தைப்பூச இருமுடி திருவிழா நடைபெறவுள்ளது. எனவே, பயணிகள் வசதிக்காக தெற்கு ரயில்வே திருச்சி கோட்டத்துக்குள்பட்ட விரைவு ரயில்கள் தற்காலிகமாக நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, காரைக்கால்-லோக்மான்ய திலக்-காரைக்கால் விரைவு ரயில்கள் (11017-11018), தாம்பரம்-ராமேஸ்வரம் - தாம்பரம் விரைவு ரயில்கள் (16109 - 16104), காரைக்கால்-தாம்பரம்-காரைக்கால் விரைவு ரயில்கள் (16176-16175), மன்னாா்குடி-சென்னை எழும்பூா்-மன்னாா்குடி விரைவு ரயில்கள் (16180 -16179), மன்னாா்குடி-ஜோத்பூா் - மன்னாா்குடி விரைவு ரயிலகள் (22674 - 22673) டிச.14 முதல் டிச.31-ஆம் தேதி வரை மேல்மருவத்தூரில் நின்று செல்லும் என தெரிவித்துள்ளாா்.