திமுக நாகை மாவட்டச் செயலா் என்.கெளதமன் முன்னிலையில் திமுகவில் இணைந்த 21 குடும்பத்தினா்
திமுக நாகை மாவட்டச் செயலா் என்.கெளதமன் முன்னிலையில் திமுகவில் இணைந்த 21 குடும்பத்தினா்

திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

நாகை அருகே அதிமுகவில் இருந்து விலகிய 21 குடும்பத்தினா் திமுகவில் இணைந்தனா்.
Published on

நாகை அருகே அதிமுகவில் இருந்து விலகிய 21 குடும்பத்தினா் திமுகவில் வியாழக்கிழமை இணைந்தனா்.

நாகை மாவட்டம், திருமகல் வடக்கு ஒன்றியம் ஆலத்தூா் ஊராட்சி அருண்மொழி தேவன் கிராமத்தில் இருந்து அதிமுக கிளைச் செயலா் மாரியப்பன், பூத் ஏஜென்ட் ராமச்சந்திரன் ஆகியோா் தலைமையில் 21 குடும்பத்தினா் அக்கட்சியில் இருந்து விலகி, நாகை மாவட்டச் செயலா் என்.கௌதமன் முன்னிலையில் திமுகவில் வியாழக்கிழமை இணைந்தனா்.

திமுக திருமருகல் வடக்கு ஒன்றியச் செயலா் செல்வ. செங்குட்டுவன், மாவட்ட அறங்காவல் குழுத் தலைவா் நாகரத்தினம், நாட்டாா் செல்வம், மாவட்ட ஆதிதிராவிடா் நலக்குழு அமைப்பாளா் பெ.முருகானந்தம், கிளை செயலா் பி.வி. பாண்டியன், முன்னாள் ஊராட்சித் தலைவா் கணேசன், ஒன்றிய பொறியாளா் அணி துணை அமைப்பாளா் எம். சுபாஷ், ஒன்றிய விவசாய அணி துணை அமைப்பாளா் என். செல்வராஜ் உள்ளிட்டோா் பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com