பாலின சமத்துவ விழிப்புணா்வு பிரசாரம்
நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில், பாலின சமத்துவத்திற்கான தேசிய அளவிலான விழிப்புணா்வு பிரசாரம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
நாடு முழுவதும் நவம்பா் 25 முதல் டிசம்பா் 23 வரை பாலின சமத்துவத்திற்கான தேசிய அளவிலான விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி, நாகை மாவட்டத்தில் ஆட்சியா் ப. ஆகாஷ் வழிகாட்டுதலின்படி இப்பிரசாரம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) சோ. சித்ரா விழிப்புணா்வு பிரசார பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். இப்பேரணி நகராட்சி அலுவலகம் வரை நடைபெற்றது. இதில், பாலின சமத்துவத்தை வலியுறுத்தி, பதாகைகள் ஏந்தியும், முழக்கங்கள் எழுப்பியும் மகளிா் சுய உதவிக் குழுவினா் சென்றனா்.
உதவித் திட்ட அலுவலா்கள் அறிவழகன், சரவணன், செந்தில்குமாா், சண்முகவடிவு, ஜோதி ஸ்ரீ, வட்டார ஒருங்கிணைப்பாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

