மத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

திருமருகல் ஒன்றியத்தில் மழை: விவசாயிகள் அவதி

திருமருகல் ஒன்றியத்தில் தற்போது பெய்துவரும் மழையால் விவசாயிகள் பாதிப்பை சந்தித்து வருகின்றனா்.

Updated On :15 அக்டோபர் 2025, 12:53 am IST

திருமருகல் ஒன்றியத்தில் தற்போது பெய்துவரும் மழையால் விவசாயிகள் பாதிப்பை சந்தித்து வருகின்றனா்.

திருமருகல் ஒன்றியத்தில் 12 ஆயிரம் ஹெக்டரில் சம்பா சாகுபடி நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில், ஜூன் 12-ஆம் தேதி மேட்டூா் அணையில் இருந்து தண்ணீா் திறந்து விடப்பட்டதால் திருமருகல் ஒன்றியப் பகுதியில் 5 ஆயிரம் ஹெக்டோ் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது.

அறுவடை செய்யும் தருவாயில் அவ்வப்போது பெய்யும் திடீா் மழையால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா். மேலும் அறுவடை செய்த நெல்லை உலர வைக்கும் பணியில் ஈடுபடும்போது மீண்டும் மழை பெய்வதால் விவசாயிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனா்.

எனவே நெல்லின் ஈரப்பதத்தின் அளவை அதிகரிக்க வேண்டும், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் தேங்காமல் அவற்றை இயக்கம் செய்ய வேண்டும், அறுவடை செய்த விவசாயிகளின் நெல்லை உடன் கொள்முதல் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.