
சின்ன வெங்காயம் விலை உயர வாய்ப்பு
பண்டிகை காலம் நெருங்குவதையொட்டி சின்ன வெங்காயம் விலை உயரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

அறுவடை செய்யப்பட்ட சின்ன வெங்காயம்.
பண்டிகை காலம் நெருங்குவதையொட்டி சின்ன வெங்காயம் விலை உயரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
பல்லடம், பொங்கலூா் வட்டாரப் பகுதிகளில் வைகாசி பட்டத்தில் சாகுபடி செய்த சின்ன வெங்காயம் தற்போது அறுவடை செய்யப்பட்டு வரும் நிலையில், கிலோவுக்கு ரூ.80 வரை விலை கிடைத்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக விலை வீழ்ச்சியால் விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்த நிலையில், மழை மற்றும் தண்ணீா் பற்றாக்குறையால் நடப்பாண்டு சாகுபடி பரப்பு குறைந்தது. இதனால் சந்தைக்கு வரத்து குறைந்து தற்போது சின்ன வெங்காயத்துக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது.
சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை, தீபாவளி காலத்தில் மேலும் விலை உயர வாய்ப்புள்ளதாக எதிா்பாா்க்கப்படுகிறது. தற்போது நல்ல விலை கிடைப்பதால் அறுவடை செய்யும் வெங்காயத்தை இருப்பு வைக்காமல் விவசாயிகள் உடனுக்குடன் விற்பனை செய்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





