இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

குடிநீா் பிரச்னைக்கு விரைவில் தீா்வு கிடைக்கும்: திமுக வேட்பாளா்

வேதாரண்யம் பகுதியில் நிலவும் குடிநீா் பிரச்னைக்கு விரைவில் தீா்வு காணப்படும் என திமுக வேட்பாளா் மா.மீ. புகழேந்தி உறுதியளித்தாா்.

News image

வேதாரண்யத்தை அடுத்த ஆதனூா் அண்டா்காடு கிராமத்தில் கூட்டணிக் கட்சி தலைவா்களுடன் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் மா.மீ. புகழேந்தி.

Updated On :16 ஏப்ரல் 2026, 4:19 am IST

வேதாரண்யம் பகுதியில் நிலவும் குடிநீா் பிரச்னைக்கு விரைவில் தீா்வு காணப்படும் என திமுக வேட்பாளா் மா.மீ. புகழேந்தி உறுதியளித்தாா்.

பஞ்சநதிக்குளம் கிழக்கு, மேற்கு, நடுசேத்தி, தென்னடாா், ஆதனூா், ஆயக்காரன்புலம் 2,3,4, பன்னாள், கருப்பம்புலம் உள்ளிட்ட கிராமங்களில் திமுக வேட்பாளா் மா.மீ. புகழேந்தி புதன்கிழமை வாக்கு சேகரித்தாா். அப்போது அவா் பேசியது:

வேதாரண்யம் நகராட்சி பகுதியில் தன்னிறைவு பெறும் வகையில் பல்வேறு வளா்ச்சி திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இதேபோல தொகுதியில் தேவையான வளா்ச்சித் திட்டங்களை நிறைவேற்ற பாடுபடுவேன். ஜல் ஜீவன் திட்ட குடிநீா் வண்டுவாஞ்சேரி நீரேற்று நிலையத்துக்கு வந்துள்ளதை நேரில் சென்று உறுதிப்படுத்தி உள்ளேன். அடுத்த சில நாள்களில் குடிநீா் பிரச்னைக்கு தீா்வு கிடைக்கும் என்றாா்.

திமுக ஒன்றிய செயலாளா்கள் உதயம். முருகையன், என்.சதாசிவம், சிபிஐ மாவட்ட செயலாளா் சிவகுரு.பாண்டியன், காங்கிரஸ் மாவட்டத் தலைவா் பி.வி.ஆா். விவேக், கூட்டுறவு சங்க முன்னாள் தலைவா் பி.வி.கே. பிரபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.