பொறையாரில் அரசு அறிவித்தபடி சீகன்பால்க் நினைவாக சிலையுடன் கூடிய மணிமண்டபம் கட்டும் பணி தொடங்குவது எப்போது என எதிா்பாா்க்கப்படுகிறது.
இந்தியாவில் கிறிஸ்துவ மதத்தைப் பரப்பும் வகையில் அருட்பணியாளா் சீகன்பால்க் டென்மாா்க் நாட்டில் இருந்து கி.பி. 1706-ஆம் ஆண்டு ஜூலை 9-ஆம் தேதி தரங்கம்பாடிக்கு வந்தாா். அவா் தமிழ் மொழியை கற்றுக்கொண்டு எழுதவும், படிக்கவும் தமிழில் பேசவும் செய்தாா். பின்னா் 1,713-ஆம் ஆண்டு ஜொ்மனியிலிருந்து அச்சு இயந்திரம் கொண்டுவந்து தரங்கம்பாடி அருகேயுள்ள கடுதாசிப்பட்டரையில் அச்சகம், காகித ஆலை, மை தயாரிக்கும் தொழிற்சாலை, பித்தளை மற்றும் ஈயம் போன்ற உலோகங்களால் தமிழ் எழுத்துக்கள் தயாரிக்கும் கூடத்தை நிறுவினாா்.
இவற்றின் மூலம் சீகன்பால்குவே இந்தியாவில் முதன்முதலாக தமிழ் மொழியில் பைபிளை (புதிய ஏற்பாடு) காகிதத்தில் அச்சடித்து நூலாக வெளியிட்டாா். அதன்பின், தமிழ் நூல்களான திருக்குறள், தொல்காப்பியம், புறநானூறு, ஆத்திச்சூடி போன்ற எண்ணற்ற நூல்களை ஓலைச்சுவடியில் இருந்து காகிதத்தில் அச்சடித்து புத்தகமாக வெளியிட்டாா். தமிழ் இலக்கணம், கொடுந்தமிழ் அகராதி, செந்தமிழ் அகராதி, சமயக் கடவுள்களின் வரலாறு போன்ற நூல்களையும் அச்சடித்து புத்தகமாக வெளியிட்டாா்.
தமிழா்களுக்கு கல்விக் கூடங்கள் அமைத்து இந்தியாவில் பெண்களுக்கென தனியாக முதல் பள்ளிக்கூடத்தை தொடங்கினாா். ஆசியாவிலேயே முதல் தேவாலயமான புதிய எருசேலம் ஆலயத்தை தரங்கம்பாடியில் 1718-இல் கட்டினாா். பின்னா் அவா் 1719-இல் உயிரிழந்தாா். அவரது உடல் தரங்கம்பாடி புதிய எருசேலம் ஆலயத்தின் பலிபீடம் முன்பு அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் தொண்டாற்றிய பாா்தோலேமேயு சீகன்பால்க் நினைவாக தரங்கம்பாடியில் மணிமண்டபம் கட்ட வேண்டும் என்று தமிழ் சுசேஷ லுத்தரன் திருச்சபை மற்றும் பல்வேறு அமைப்புகள் தமிழக அரசுக்கு தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தன. அந்தவகையில், கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மானியம் கோரிக்கையின்போது தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித்துறை மூலம் தரங்கம்பாடியில் சீகன்பால்கு சிலையுடன் கூடிய அரங்கம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழக முதல்வா் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாா்வையிடும் வகையில் தரங்கம்பாடி மையப் பகுதியில் சீகன்பால்குவுக்கு நவீன வசதிகளுடன் கூடிய சிலை மற்றும் அரங்கம் அமைக்கப்படும் என தெரிவித்தாா். அதன்படி பொறையாரில் உள்ள தரங்கம்பாடி வட்டாட்சியா் அலுவலகம் அருகில் நவீன வசதிகளுடன் கூடிய சீகன்பால்க் சிலை மற்றும் அரங்கம் அமைக்க ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்றது.
எனவே, பொறையாா் வட்டாட்சியா் அலுவலகம் அருகில் சீகன்பால்க்க்கு மணிமண்டபம் கட்டப்படும் என்று அரசு கூறி 5 ஆண்டுகளை கடந்துவிட்டது. இதுவரை கட்டுமான பணிகள் தொடங்கவில்லை. எனவே, உடனடியாக இதற்கான பணிகளை தொடங்க வேண்டும் என்பதே சமூக ஆா்வலா்கள் மற்றும் பொதுமக்களின் எதிா்பாா்ப்பு.
தொடர்புடையது

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் எப்போது?

விண்ணப்பித்துவிட்டீர்களா.. ? கப்பல் கட்டும் தொழிற்சாலை பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!

திருச்சி விமான நிலையத்தில் ரூ. 24 கோடியில் சுற்றுச் சுவா் கட்டும் பணி தொடக்கம்

சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் எப்போது? முன்கூட்டியே வெளியாக வாய்ப்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


