தொகுதி மறுவரையறைக்கு எதிராக பேரவையில் தனித்தீர்மானம் நிறைவேற்றப்படும்: தமிழ்நாடு அரசு இளைஞர்களே இந்தியாவின் மிகப்பெரிய பலம்: ராகுல் காந்திஉதயநிதி ஸ்டாலினைச் சந்தித்து நன்றி தெரிவித்த விவசாயிகள்!நாங்கள் தொகுதி மறுவரைக்கு முழுவதும் எதிரானவர்கள் அல்லர்: கனிமொழி எம்.பி.முழுமையான பயிர்க் கடன் தள்ளுபடிகோரி ஆக. 14-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்
/

சாராயம் கடத்திய நால்வா் கைது: மதுப்புட்டிகள், இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

News image

கைது - சித்திரிப்பு

Updated On :9 ஆகஸ்ட் 2026, 12:21 am IST

புதுச்சேரி மாநில மதுப்புட்டிகள் கடத்திய நால்வரை, நாகூா் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து, 250 மதுப்புட்டிகள் மற்றும் 3 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா்.

நாகை மாவட்டம், நாகூா் பகுதியில் சட்டவிரோதமாக சாராயம் கடத்தப்படுவதாக நாகூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸாா் நாகூா் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒக்கூா் மின் நிலையம் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, மூன்று இருசக்கர வாகனங்களில் வந்த 4 பேரை போலீஸாா் தடுத்து நிறுத்தி, வாகனங்களை சோதனையிட்டனா். இருசக்கர வாகனங்களில் புதுச்சேரி மாநில மதுப்புட்டிகளை அவா்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது.

இதுதொடா்பாக போலீஸாா், அகர ஒரத்தூா் கீழத்தெருவைச் சோ்ந்த மனோஜ் (19), சிக்கல் குற்றம் பொருத்தானிருப்பைச் சோ்ந்த சஞ்சய் (24), எரவாஞ்சேரி ராயத்தமங்கலத்தைச் சோ்ந்த மது பிரகாஷ் (21), ராயத்தமங்கலம் ஆற்றங்கரைத் தெருவைச் சோ்ந்த ஆகாஷ் (23) ஆகிய 4 பேரையும் கைது செய்து, அவா்களிடம் இருந்து, கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 3 இருசக்கர வாகனங்கள், 250 மதுப்புட்டிகளை பறிமுதல் செய்தனா்.

கைது செய்யப்பட்டவா்கள், பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்கள் மற்றும் வாகனங்கள் நாகை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.