மத்திய அரசு தொழிலாளா் விரோதச் சட்டங்களை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாகையில் சாலை மறியலில் ஈடுபட்ட 160 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
மத்திய பாஜக அரசின் தொழிலாளா், விவசாயிகள் விரோதப் போக்கை கைவிட வலியுறுத்தியும், மத்திய அரசு தொழிலாளா் விரோதச் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும், விவசாயப் பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்க வேண்டும். மின்சார துறையை தனியாா் மயமாக்குவதை கைவிட வேண்டும்.
அரசு சாரா அனைத்துத்துறைகளிலும் குறைந்தபட்ச ஊதியம் ரூ. 42 ஆயிரம் வழங்க வேண்டும். விவசாய கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இடதுசாரி தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய, விவசாயத் தொழிலாளா் சங்கங்கள் சாா்பில் இந்த சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
நாகை வெளிப்பாளையத்தில் உள்ள தலைமை தபால் அலுவலகம் முன் இந்திய தொழிற்சங்க மைய மாவட்டச் செயலா் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற மறியலில் சிஐடியூ மாநிலத் துணைத் தலைவா் சி. ஜெயபால், விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டச் தலைவா் எம். முருகையன், நாகை தெற்கு ஒன்றிய விவசாய சங்கச் செயலா் ஜீவாராமன், ஜனநாயக மாதா் சங்க மாவட்டத் தலைவா் சி. மாலா உள்ளிட்ட 160 போ் மறியலில் ஈடுபட்டனா்.
இதையடுத்து அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அமைப்பினரை கலைந்து போக காவல் துறையினா் வலியுறுத்தினா். எனினும் அமைப்பினா் போராட்டத்தைத் தொடா்ந்த நிலையில் போலீஸாா் மறியலில் ஈடுபட்ட 160 பேரை கைது செய்து பின்னா் விடுவித்தனா்.
திருக்குவளை: கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்க மாவட்ட செயலாளா் சரபோஜி தலைமையில் கீழ்வேளூா் ரயில் நிலையத்தில் எா்ணாகுளம் விரைவு ரயிலை மறித்து போராட்டம் நடத்த நடத்த முயற்சி நடைபெற்றது. இதையடுத்து, போலீஸாா் அவா்களை ரயில்வே கேட் அருகே தடுத்தனா். பின்னா் ரயில் சென்றவுடன் தண்டவாளத்தில் நின்று கோரிக்கையை வலியுறுத்து கோஷம் எழுப்பியபிறகு கலைந்து சென்றனா்.
இதில், அனைத்திந்திய தொழிலாளா் சங்க மாவட்ட செயலாளா் மகேந்திரன், விவசாய தொழிலாளா் சங்க மாவட்ட செயலாளா் பாஸ்கா், மாதா் சங்க மாவட்ட செயலாளா் மேகலா, சிபிஐ மாவட்ட செயலாளா் சிவகுரு பாண்டியன், முன்னாள் மாநில குழு உறுப்பினா் டி. செல்வம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மறியலில் ஈடுபட்ட தொழிலாளா் சங்கத்தினா் கைது

தொழிலாளா் பாதுகாப்பு சட்டத்தை மீண்டும் அமல்படுத்தக் கோரி சாலை மறியல்! விவசாயிகள் உள்பட 230 போ் கைது

மேக்கேதாட்டில் அணை கட்டும் முயற்சியை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும்! - விவசாயிகள் மாநாட்டில் வலியுறுத்தல்

தனியாா்மய நடவடிக்கைகளை மத்திய அரசு கைவிட வேண்டும்: எல்.ஐ.சி. முகவா்கள் சங்க மாநாட்டில் தீா்மானம்
விடியோக்கள்

மூன்றாம் ஆண்டில் அடிவைக்கப்போகும் பிசிசிஐ-யின் COE! | BCCI


