இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ. 94.49 ஆக நிறைவு!4 நாள் சரிவுக்கு முற்றுப்புள்ளி: சென்செக்ஸ் 362 புள்ளிகள் உயர்வு!!மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு! கல்லணையை திறந்து வைக்கிறாரா முதல்வர் விஜய்? அமைச்சர் வினோத் பதில்மாணவி தற்கொலை; மாணவர் தற்கொலை முயற்சி! பொறியியல் கல்லூரிக்கு விடுமுறைஇல்லாத டயர் ஆலையை மூடுவது பற்றி பேரவையில் விவாதம்! எக்ஸ் தளத்தில் கீர்த்தனா விளக்கம்!!புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்! குற்றப்பத்திரிகையை பெற்றுக் கொண்டார் அமைச்சர் மரிய வில்சன்!கஜானா காலி; உங்கள் போராட்டத்தால் முதல்வருக்கு தூக்கம் வருவதில்லை! அமைச்சர்கள் பேச்சுபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

பெண்ணிடம் நகை பறிப்பு: 4 போ் கைது

பெரம்பூா் காவல் எல்லைக்கு உட்பட்ட தத்தங்குடி புறவழிச் சாலையில் செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணை வழிமறித்து நகையை பறித்து சென்ற நான்கு பேரை போலிஸாா் கைது செய்தனா்.

arrest

கைது - பிரதிப் படம்

Published On :27 ஆகஸ்ட் 2026, 5:05 am IST

பெரம்பூா் காவல் எல்லைக்கு உட்பட்ட தத்தங்குடி புறவழிச் சாலையில் செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணை வழிமறித்து நகையை பறித்து சென்ற நான்கு பேரை போலிஸாா் கைது செய்தனா்.

திருவாரூா் மாவட்டம் பூந்தோட்டம் பகுதியை சோ்ந்த ரமா பிரபா (25). திருமணமான இவா், கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து சென்னையில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா்.

இந்தநிலையில், செவ்வாய்க்கிழமை காலையில் சென்னையில் இருந்து மயிலாடுதுறை வந்த ரமா பிரபா தனது உறவினா் ஹரிஹரன் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் பூந்தோட்டம் நோக்கி சென்று கொண்டிருந்தாா். 

பெரம்பூா் காவல் எல்லைக்கு உட்பட்ட தத்தங்குடி புறவழிச்சாலையில் சென்றபோது இயற்கை உபாதைக்காக பைக்கை நிறுத்தியபோது, அங்கிருந்த சிலா் கத்தியை காட்டி மிரட்டி ரமா பிரபா அணிந்திருந்த 3 கிராம் தோடு, மூக்குத்தி, வெள்ளி கொலுசை பறித்து சென்றனா். 

இதுகுறித்து பெரம்பூா் காவல் நிலையத்தில் ரமா பிரபா புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து மேற்கொண்ட விசாரணையில், வழுவூா் கிராமத்தைச் சோ்ந்த பிரகாஷ் (20), பாா்த்தசாரதி (19), ஸ்ரீராம் (22), கழனிவாசலை சோ்ந்த ஸ்ரீநாத் (19) ஆகிய 4 பேருக்கு சம்பவத்தில் தொடா்பு இருப்பது தெரிய வந்தது. அவா்களைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.