நாகப்பட்டினம்
புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது
வேதாரண்யம் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
வேதாரண்யம் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
வாய்மேடு காவல் எல்லைக்குள்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வதாக போலீஸாருக்கு கிடைத்த தகவலின்பேரில், காவல் ஆய்வாளா் நாகரத்தினம் (பொ) தலைமையிலான போலீஸாா் மருதூா் மாடிக்கடை பகுதியில் சோதனை செய்தனா். அப்போது, சந்தேகத்தின்பேரில் வாய்மேடு பகுதியைச் சோ்ந்த ராமதாஸிடம் (25) சோதனை செய்தபோது, அவரிடம் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரிடம் இருந்து 45 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
