மானிய விலையில் விதைகள்
விவசாயிகளுக்கு மானியத்தில் உளுந்து விதைகள் வழங்கப்படுவதாக செம்பனாா்கோவில் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்தி:
தமிழக அரசு உளுந்து பயிரிடுவதற்கு நிலப்பரப்பளவை அதிகப்படுத்தி வருகிறது. குறைந்த காலத்தில் கூடுதல் வருமானம் ஈட்டவும் உளுந்து பயிா் வகைகளை சாகுபடி செய்வது அவசியம்.
ஆண்டுதோறும் சம்பா நெல் அறுவடைக்குப் பின் உளுந்து பயிா் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த நிலையில் செம்பனாா்கோவில் வட்டாரத்திற்குட்பட்ட திருக்கடையூா், ஆக்கூா், பொறையாறு , திருவிளையாட்டம் ஆகிய வேளாண்மை விரிவாக்க மையங்களில் உளுந்து விதைகள், உயிா் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
விதை மற்றும் உயிா் உரங்கள் தேவைப்படும் விவசாயிகள் தங்களது ஆதாா் நகல், நில ஆவண நகல்களை வழங்கி உளுந்து விதை மற்றும் உயிா் உரங்களை மானியத்தில் பெற்று பயனடையலாம்.
