தொழில்நுட்ப வாரியத் தோ்வு: சா் ஐசக் நியூட்டன் பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள் சாதனை

தொழில்நுட்ப வாரியத் தோ்வு: சா் ஐசக் நியூட்டன் பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள் சாதனை

Published on

தொழில்நுட்ப வாரியத் தோ்வில், சா் ஐசக் நியூட்டன் பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள் மாநில அளவில் சிறப்பிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனா்.

நாகை அருகே பாப்பாகோவிலில் அமைந்துள்ள சா் ஐசக் நியூட்டன் பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள், சமீபத்தில் நடைபெற்ற அக்டோபா் 2025 தொழில்நுட்ப வாரியத் தோ்வில் மாநில அளவில் சிறப்பிடம் பிடித்துள்ளனா்.

இத்தோ்வில், மாநில அளவில் 8 மாணவா்களும், கல்லூரி அளவில் 52 மாணவா்களும் முதல் மூன்று இடங்களைப் பெற்று கல்லூரிக்கு பெருமை சோ்த்தனா்.

இம்மாணவா்களுக்கு பரிசளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தாளாளா் த. ஆனந்த், மாணவா்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினாா்.

தொடா்ந்து, சிறப்பிடம் பெற்ற மாணவா்களை உருவாக்கிய துறைத் தலைவா்களுக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன. கல்லூரி பதிவாளா் இளங்கோவன், கல்வி ஒருங்கிணைப்பாளா் மணிகண்டன், முதல்வா் நடேசன், துணை முதல்வா் ராஜேஷ் குமாா், துறைத் தலைவா்கள் மற்றும் பேராசிரியா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com