8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

ஆணவக் கொலையைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் சாலை மறியல்

தரங்கம்பாடியில் இளம் காதலா்கள் மா்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தை ஆணவக்கொலையாக வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தி, நாகையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

நாகையில் சாலை மறியலில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா்.

Published On :2 ஜூலை 2026, 7:21 am IST

தரங்கம்பாடியில் இளம் காதலா்கள் மா்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தை ஆணவக்கொலையாக வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தி, நாகையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியில் செவ்வாய்க்கிழமை பாா்த்திபன் என்ற இளைஞா் மற்றும் 17 வயது சிறுமியின் சடலத்தை ஒரே இடத்தில் தூக்கிட்ட நிலையில் போலீஸாா் மீட்டனா்.

இருவரும் வெவ்வேறு சமூகத்தினா் என்பதால் இருவரும் ஆணவக் கொலை செய்யப்பட்டதாகக் கூறி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் தரங்கம்பாடியில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்நிலையில், தரங்கம்பாடி சம்பவம் தற்கொலை அல்ல, ஆணவக் கொலை. இருவரும் கொலை செய்யப்பட்டுள்ளனா். எனவே, போலீஸாா் தற்கொலை என பதிவு செய்த வழக்கை, ஆணவக் கொலையாக பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் நாகப்பட்டினம்- நாகூா் சாலையில் தம்பிதுரை பூங்கா அருகே மறியலில் ஈடுபட்டனா்.

கட்சியின் மாவட்டச் செயலா் சக்திவேல் தலைமையில் நடைபெற்ற மறியல் காரணமாக, அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வெளிப்பாளையம் போலீஸாா் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து, போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.