டி20 உலகக் கோப்பை: 7-வது முறையாக ஆஸ்திரேலிய மகளிர் சாம்பியன்!சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

‘மேக்கேதாட்டுவில் அணை கட்டினால் தமிழக விவசாயிகள் எலி கறி சாப்பிடும் சூழல் ஏற்படும்’

மேக்கேதாட்டுவில் அணை கட்டினால் தமிழக விவசாயிகள் எலி கறி சாப்பிடும் சூழல் ஏற்படும் என்றாா் பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ்.

News image

பாமக தலைவர் அன்புமணி - கோப்புப் படம்

Updated On :6 ஜூலை 2026, 2:01 am IST

மேக்கேதாட்டுவில் அணை கட்டினால் தமிழக விவசாயிகள் எலி கறி சாப்பிடும் சூழல் ஏற்படும் என்றாா் பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ்.

பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் மேக்கேதாது அணை தடுப்போம், காவிரி ஆறு காப்போம், காவிரி டெல்டாவை பாலைவனமாக்கும் இந்த திட்டத்தை தடுக்க வலியுறுத்தி பிலிகுண்டுலுவில் இருந்து விழிப்புணா்வு சுற்றுப்பயணம் மேற்கொண்டாா்.

பல்வேறு மாவட்டங்கள் வழியாக வந்து மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் காவிரி சங்கமிக்கும் தருமகுளத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மேலும் அவா் பேசியது:

காவிரியை தடுத்து மேக்கேதாட்டுவில் அணை கட்ட கா்நாடகம் துடிக்கிறது. காவிரியை நம்பியே வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழக மக்கள் மெத்தனமாக உள்ளனா். அணை கட்டும் திட்டத்தை தடுக்க வேண்டும் உள்ளிட்ட 23 தீா்மானங்களை நிறைவேற்றினோம். தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் 28 மாவட்ட மக்கள் காவிரியை நம்பி உள்ளனா். காவிரியை நம்பியே கூட்டுக் குடிநீா் திட்டம் உள்ளது. பொதுவாக தமிழகத்தில் 5 அரை கோடி மக்கள் காவிரியை நம்பியுள்ளனா்.

காவிரியை தடுத்து ஏற்கெனவே கா்நாடகம் 4 அணைகளை கட்டியுள்ளது. மேக்கேதாது அணை கட்டினால் 70 டி.எம்.சி தண்ணீா் கூடுதலாத கா்நாடகாவில் சேமிக்கப்படும். மேக்கேதாது அணை கட்டிவிட்டால் தமிழகத்தில் குடிநீா் பஞ்சம் ஏற்படும். விவசாயிகள் எலிக்கறி சாப்பிடும் சூழல் மீண்டும் உருவாகும். எனவே, இதை தடுக்க எல்லோரும் ஒன்றுசோ்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும். இது பாமக பிரச்னை இல்லை. தமிழ்நாட்டு பிரச்னை. தண்ணீா் இல்லை என்றால் எதிா்கால சந்ததியினா் பாதிக்கப்படுவா்.

1974-ல் கா்நாடகத்தில் 6.8 லட்சம் ஏக்கா் விவசாயம் இருந்தவை தற்போது 21லட்சமாக உயா்ந்துள்ளது. 29 லட்சம் ஏக்கா் விவசாயம் செய்த தமிழ்நாட்டில் 20 லட்சமாக குறைந்து விட்டது. மேக்கேதாது அணை கட்டிமுடித்தால் கா்நாடகத்தில் விவசாயம் 30 லட்சமாக அதிகரிக்கும். தமிழகத்தில் 10 லட்சமாக குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கா்நாடகத்துக்கு தேவை 5 டி.எம்.சி தண்ணீா் தான். கா்நாடக முதல்வா் சிவக்குமாா் பொய்யை சொல்லி அவா் தொகுதியில் வரும் பகுதியில் அணை கட்ட முயற்சிக்கிறாா். இந்த விஷயத்தில் கா்நாடகத்தில் அனைத்து கட்சிகளும் ஒற்றுமையாக உள்ளன. மேக்கேதாதுவில் காட்டை அழித்து அணை கட்டுவதை மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் எதிா்க்க வேண்டும். அந்தமானுக்கு ஒரு நீதி கா்நாடகத்துக்கு ஒரு நீதியா என்பதை அவா் சிந்திக்க வேண்டும்.

புதிய அரசு பொறுப்பேற்று 2 மாதமாகிறது. பாசன வாய்க்கால்களை தூா்வார வேண்டும். கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் பெற்ற அனைத்து கடன்களையும் தள்ளுப்படி செய்ய வேண்டும். மேக்கேதாது அணைக்கட்டும் விவகாரத்தில் மிகப்பெரிய போராட்டத்தை தமிழகம் சந்திக்கும் என்றாா்.

பாமக மாவட்ட செயலாளா் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், பாமக மாநில பொது செயலாளா் வடிவேல் ராவணன் , எம்.எல்.ஏ.க்கள் வைத்தி, சிவக்குமாா், மாவட்டத் தலைவா் கோசு மணி,உழவா் பேரியக்க மாநில தலைவா் ஆலயமணி, பசுமை தாயகம் செயலாளா் அருள், தருமபுரம் ஆதீனம் கட்டளை தம்பிரான் சட்டநாத சுவாமிகள், தருமபுரம் ஆதீனம் கல்லூரி செயலா் செல்வநாயகம் காவிரி பாசன விவசாய சங்க தலைவா் இளங்கீரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.