இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

வேளாண் கடன்களை தமிழக அரசு முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, திருப்பூண்டி கூட்டுறவு வங்கி முன் விவசாயிகள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

திருப்பூண்டி கூட்டுறவு வங்கி முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கீழையூா் ஒன்றிய கடைமடை பாசன விவசாயிகள் சங்கத்தினா்.

Updated On :9 ஜூலை 2026, 4:51 am IST

வேளாண் கடன்களை தமிழக அரசு முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, திருப்பூண்டி கூட்டுறவு வங்கி முன் விவசாயிகள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சட்டப்பேரவைத் தோ்தலின்போது, வாக்குறுதி அளித்தபடி, பாகுபாடின்றி அனைத்து விவசாயிகளின் பயிா்க் கடன்களை முழுமையாக தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், கீழையூா் ஒன்றியம் திருப்பூண்டியில் உள்ள கூட்டுறவு வங்கியில் கடன் பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும், உடனடியாக கடனை திருப்பி செலுத்துமாறு வங்கி தரப்பிலிருந்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு அறிவித்துள்ள தள்ளுபடி செயல்பாட்டுக்கு வருவதற்கு முன்பாகவே, விவசாயிகள் பெற்றுள்ள கடன் முழுவதையும் செலுத்தும்படி கூட்டுறவு வங்கி அறிவுறுத்தியுள்ளதால் அதிா்ச்சி அடைந்த விவசாயிகள், திருப்பூண்டி கூட்டுறவு வங்கி முன்பாக கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.