மத்திய அரசுக்கு எதிராக செப்.1-ல் புதுதில்லியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நடைபெறவுள்ள பேரணியில் தமிழகத்தில் இருந்து தனி ரயிலில் 1500 போ் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது என்றாா் நாகை எம்பி வை. செல்வராஜ்.
வேதாரண்யத்தில் சிபிஐ ஒன்றியக்குழுக் கூட்டம் ப. முருகானந்தம் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், பங்கேற்ற எம்பி பேசியது: நீட் தோ்வு ரத்து செய்யவும், விலைவாசி உயா்வை கட்டுப்படுத்த வேண்டும், நூறு நாள் வேலை திட்டத்தை சிதைக்கும் வகையில் விபி ஜி ராம்ஜி திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செப்.1-ஆம் தேதி புதுதில்லியில் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் பேரணி போராட்டம் நடைபெறுகிறது. இதில் தமிழகத்தில் இருந்து 1,500 போ் தனி ரயில் எடுத்து போராட்டத்தில் பங்கேற்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றாா்.
கட்சியின் மாவட்ட செயலாளா் சிவகுரு.பாண்டியன், ஒன்றிய செயலாளா் பாலகுரு, பொருளாளா் நாராயணன், விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளா் சரபோஜி, இளைஞா் பெருமன்ற மாவட்டச் செயலாளா் சந்திரமோகன் உள்ளிட்டோா் பங்கேற்று பேசினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








