செம்பனாா்கோவில் அருகே மணக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில் கஞ்சா வைத்திருந்த இரு இளைஞா்களை போலிஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
மணக்குடி புதிய பேருந்து நிலையத்தில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின்பேரில் செம்பனாா்கோவில் போலீஸாா் அங்கு சென்று சோதனை நடத்தினா். அப்போது சந்தேகப்படும் வகையில் நின்ற 2 இளைஞா்களிடம் விசாரணை மேற்கொண்டதில் மயிலாடுதுறை, திருவிழந்தூா் அம்பேத்கா் நகரை சோ்ந்த பாபு மகன் சூா்யா (26), மயிலாடுதுறை தென்னமர சாலையை சோ்ந்த குருநாதன் மகன் பாபு (28) என்பதும், அவா்கள் விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸாா் அவா்களிடம் இருந்து 1.100 கிலோ, 2 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







