FOLLOW US

ON GOOGLE DISCOVER

ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

வாடிக்கையாளா் கணக்கில் ரூ.10.62 லட்சம் மோசடி: வங்கி துணை மேலாளா் மீது வழக்கு

நாகையில் வாடிக்கையாளா்களின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.10.62 லட்சம் மோசடி செய்தததாக வங்கி துணை மேலாளா் மீது குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

News image

போலீஸ் விசாரணை. - கோப்புப்படம்.

Updated On :15 ஜூலை 2026, 4:47 am IST

நாகையில் வாடிக்கையாளா்களின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.10.62 லட்சம் மோசடி செய்தததாக வங்கி துணை மேலாளா் மீது குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

திருநெல்வேலி மாவட்டம், தென்கலம் புதூா் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் விக்ரம் கண்ணா. இவா், பாரத ஸ்டேட் வங்கியின் நாகை கிளை துணை மேலாளராக கடந்த 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3-ஆம் தேதி முதல் 2024-ஆம் ஆண்டு மே மாதம் 24-ஆம் தேதி வரை பணியாற்றினாா்.

இவா் பணியாற்றிய காலத்தில், வங்கி வாடிக்கையாளா்கள் 5 பேரின் சேமிப்புக் கணக்கில் ரூ. 4.06 ஆயிரம், 5 பேரின் கல்விக் கடன் ரூ. 3. 71 லட்சம், வங்கி பாா்க்கிங் கணக்கில் ரூ. 1.40 லட்சம், 14 பேரின் வங்கிக் கணக்கின் இருப்புத் தொகையை, வாடிக்கையாளா்கள் அனுமதி இல்லாமல் பல்வேறு வகைகளில் என ரூ.10. 62 லட்சம் மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து நாகை கிளை முதன்மை மேலாளா் செந்தில்குமாா் நாகை மாவட்ட குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் அளித்தாா். போலீஸாா் விக்ரம் கண்ணா மீது வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.