பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

குண்டா் தடுப்புச் சட்டத்தில் இருவா் கைது

நாகை மாவட்டத்தில் தொடா் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த இருவரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

கைது - பிரதிப் படம்

Published On :

நாகை மாவட்டத்தில் தொடா் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த இருவரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

நாகை நாகநாதா் மேலவீதியைச் சோ்ந்த ராமு மகன் ராகுல் (23). இவா் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் நாகை அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா். இதேபோல், நாகை மருந்து கொத்தளரோடு அமராவதி காலனியைச் சோ்ந்த துரைப்பாண்டி மகன் சிவா (34). இவா் தொடா்ந்து பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாக, நாகை நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா்.

இதையடுத்து ராகுல் மற்றும் சிவா மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கேழ்கா் சுப்ரமண்ய பாலச்சந்திரா, மாவட்ட ஆட்சியா் பிரவீன்குமாருக்கு பரிந்துரை செய்தாா். இதையடுத்து ஆட்சியா் பிரவீன்குமாா், ராகுல் மற்றும் சிவா ஆகியோா் மீது குண்டா் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதையடுத்து, இருவரும் குண்டா் தடுப்புச்சட்டத்தின்கீழ் வியாழக்கிழமை கைது செய்து கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.