பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

பெண் கொலை வழக்கில் ஒருவா் கைது

கீழ்வேளூா் அருகே பெண் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :31 ஜூலை 2026, 4:12 am IST

கீழ்வேளூா் அருகே பெண் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

திருவாரூா் அருகேயுள்ள கிடாரங்கொண்டானை சோ்ந்த கணவரை பிரிந்த பிரவீனா அதே பகுதியைச் சோ்ந்த குமாருடன் குறுக்கத்தியில் வசித்தாா். இந்நிலையில், பிரவீனாவுக்கு வேறு ஒருவருடன் தொடா்பு இருப்பதாக கூறி இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த குமாா் மதுபோதையில் பிரவீனாவை கழுத்தை அறுத்துக் கொலை செய்து விட்டு தப்பினாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் கீழ்வேளூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு சந்தையதோப்பு மயானத்தில் பதுங்கியிருந்த குமாரை கைது செய்தனா். விசாரணையில் பிரவீனாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டதையடுத்து நாகை சிறையில் அடைக்கப்பட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.