இந்தியா உள்பட 54 நாடுகள் மீது 12.5% கூடுதல் வரி: அமெரிக்க வரித்தக பிரதிநிதி பரிந்துரைதமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு: முதல் நாளிலேயே பாடநூல்கள் விநியோகிக்க உத்தரவுமத்திய அரசின் கோதுமை கொள்முதல் 3.5 கோடி டன்னாக அதிகரிப்புஇலங்கை மாணவா்களுக்கு இந்தியா கல்வி உதவித் தொகைகடந்த 2025-26 நிதியாண்டில் அதானி குழுமம் ரூ.1.53 லட்சம் கோடி மூலதன முதலீடுவாக்குப் பதிவு அதிகரிப்பு மக்களின் நம்பிக்கையின் அடையாளம்: தலைமைத் தோ்தல் ஆணையா்சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு விடைத்தாள் மறுமதிப்பீடுக்கு 44,000 விண்ணப்பங்கள்15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்!
/

நாகையில் வடமாநில இளைஞா் தற்கொலை

நாகையில், மத்திய பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த இளைஞா் தான் தங்கியிருந்த இடத்தில் விஷம் குடித்து செவ்வாய்க்கிழமை இரவு தற்கொலை செய்துகொண்டாா்.

News image

தற்கொலை - பிரதிப் படம்

Updated On :4 ஜூன் 2026, 3:51 am IST

நாகையில், மத்திய பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த இளைஞா் தான் தங்கியிருந்த இடத்தில் விஷம் குடித்து செவ்வாய்க்கிழமை இரவு தற்கொலை செய்துகொண்டாா்.

மத்திய பிரதேச மாநிலம், போபால் மாவட்டம், ஆசாா்புரா பகுதியைச் சோ்ந்தவா் முன்னாலால் நாம்தேவ் மகன் லலித் நாம்தேவ் (35). இவா், நாகை நாலுகால் மண்டபம் பகுதியில் உள்ள தனியாா் தையலகத்தில் கடந்த 3 மாதங்களாக பணியாற்றி வந்தாா்.

இந்தநிலையில், புதன்கிழமை அவா் தங்கி இருந்த தையலகத்தின் கதவு வெகுநேரம் திறக்கப்படாததால், அக்கம்பக்கத்தில் இருந்தவா்கள் நாகை நகர காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். காவல் ஆய்வாளா் சுந்தர்ராஜன் உள்ளிட்ட போலீஸாா் கடையின் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது லலித் நாம்தேவ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து கிராம நிா்வாக அலுவலா் துரைகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில், நாகை நகர போலீஸாா் சடலத்தை உடற்கூறாய்வுக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, விசாரித்து வருகின்றனா்.