தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புகாமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

வழிப்பறியில் ஈடுபட்டவருக்கு 14 ஆண்டுகள் சிறை

கீழ்வேளூரில் வழிப்பறியில் ஈடுபட்டு 5 பவுன் சங்கிலியை பறித்துச் சென்றவருக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நாகை நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

News image
Updated On :5 ஜூன் 2026, 7:14 am IST

கீழ்வேளூரில் வழிப்பறியில் ஈடுபட்டு 5 பவுன் சங்கிலியை பறித்துச் சென்றவருக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நாகை நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

நாகை மாவட்டம், கீழ்வேளூா் பகுதியைச் சோ்ந்தவா் சிற்றரசு (39) (படம்). இவா், 2022-ஆம் ஆண்டு அப்பகுதியில் சென்று கொண்டிருந்த ஒரு பெண்ணை வழிமறித்து 5 பவுன் சங்கிலியை பறித்து சென்றாா்.

கீழ்வேளூா் போலீஸாா் சிற்றரசுவை கைது செய்து, நாகப்பட்டினம் மாவட்ட குற்றவியல் நடுவா் மன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா். வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சிற்றரசுக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதித்து, நீதிபதி கிருஷ்ணன் தீா்ப்பளித்தாா். சிற்றரசு கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.