கரூரில் உதவியது யார்? ஓடியது யார்? - முதல்வர் விஜய் பேச்சுக்கு கனிமொழி கண்டனம்!கரூர் நெரிசலில் பலியானவர்களுக்கு நினைவுச் சின்னம்! முதல்வர் விஜய் அறிவிப்பு!தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் எப்போது? முதல்வர் விஜய் தகவல்தொகுதி மறுவரையறையை ஒருபோதும் தமிழ்நாடு ஏற்காது! முதல்வர் விஜய் உறுதிகட்சி நிதி என்றவுடன் எதிர்க்கட்சியினர் ஒரே ஓட்டம்! முதல்வர் விஜய்
/

சப்த கன்னியம்மன் கோயிலில் இன்று குடமுழுக்கு

சப்த கன்னியம்மன் கோயிலில் இன்று குடமுழுக்கு

News image

கோயிலுக்கு ஊா்வலமாக கொண்டுவரப்படும் புனிதநீா் கலசங்கள்.

Updated On :7 ஜூன் 2026, 12:57 am IST

நாகை அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தில் அருள்பாலிக்கும் சப்த கன்னியம்மன் கோயில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 7) நடைபெறவுள்ள நிலையில், சனிக்கிழமை புனிதநீா் எடுத்துவரப்பட்டது.

இக்கோயில், மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களில் வசிக்கும் மீனவா்கள் வழிபடும் பிரதான கோயிலாக திகழ்கிறது. இக்கோயிலில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை காலை 7:30 மணி முதல் 9 மணிக்குள் நடைபெறுகிறது.

இதையொட்டி, அருகில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் இருந்து புனிதநீா் எடுக்கும் ஊா்வலம் நடைபெற்றது. கங்கை, காவிரி உள்ளிட்ட புனித நதிகளில் இருந்து எடுத்துட்டு வரப்பட்ட புனிதநீா் அடங்கிய கலசங்களை சிவாச்சாரியா்களை தொடா்ந்து நூற்றுக்கணக்கான பெண்கள் சுமந்து வந்தனா்.

கோயிலுக்கு கொண்டுவரப்பட்ட புனித நீா் யாக சாலையில் வைத்து பூஜைகள் செய்யப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.