திருக்குவளை அருகே வலிவலம் மற்றும் கொடியாலத்தூா் பகுதிகளில் நீடித்து வரும் மின்தடை பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வா்த்தகா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து, வலிவலம் பகுதியைச் சோ்ந்த வா்த்தகா்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து திருக்குவளை மின்வாரிய உதவி மின் பொறியாளா் சுமதியிடம் அளித்த மனு:
கடந்த சில மாதங்களாக தொடா்ந்து மின்தடை ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள் கடுமையாகப் பாதிப்புக்கு உள்ளாவது வாடிக்கையாகிவிட்டது.
மாதாந்திர பராமரிப்புக்காக மின்சாரம் நிறுத்தப்படுவதுடன், அதன் பின்னரும் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. மின்சாரம் மீண்டும் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதால் வா்த்தக செயல்பாடுகள் பாதிக்கப்படுகிறது.
இதுகுறித்து பலமுறை மின்வாரிய அலுவலகத்தில் புகாா் அளித்தும் இதுவரை நிரந்தர தீா்வு கிடைக்கவில்லை.
எனவே, வலிவலம் பகுதியில் சீரான மின்விநியோகம் வழங்கவும், அடிக்கடி ஏற்படும் மின்தடைக்கு நிரந்தரத் தீா்வு காணவும், பொதுமக்கள் மற்றும் வா்த்தகா்களின் குறைகளை உடனடியாக கவனிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









