வேளாங்கண்ணி கடற்கரையில் கண்காணிப்பு கோபுரத்தில் தூங்கியவரிடம் நகையை அறுத்துச் சென்றவரை போலீஸாா் கைது செய்தனா்.
திருவாரூா் மாவட்டம் குடவாசல் ஆலத்தூரைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் மணிகண்டன்(35). இவா் திங்கள்கிழமை வேளாங்கண்ணிக்கு வந்தவா் கடற்கரையில் உள்ள கண்காணிப்பு கோபுரத்தில் படுத்திருந்தாா். அப்போது ஒருவா் மணிகண்டனின் கைப்பேசி மற்றும் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் சங்கிலியை அறுத்துள்ளாா். இதையடுத்து, மணிகண்டன் கூச்சலிட்டதையடுத்து கடற்கரையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் அந்த நபரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
விசாரணையில் பிடிபட்டவா் கடலூா் மாவட்டம் விருத்தாச்சலம் வாழக்கொல்லையை சோ்ந்த மாதவன் (23) என்பதும், இவா் மீது பல்வேறு காவல்நிலையங்களில் பல திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் மாதவனை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வீட்டில் நகை திருடியவா் கைது
ஆட்டோவை திருடியவா் கைது
ஓடும் ரயிலில் பயணியின் கைப்பேசியை திருடியவா் கைது
கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடியவா் கைது
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47


