பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

சித்தாய்மூா் பொன்வைத்தியநாதா் கோயில் கும்பாபிஷேகம்

திருக்குவளை அருகேயுள்ள சித்தாய்மூா் அகிலாண்டேஸ்வரி சமேத பொன்வைத்தியநாதா் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 ஜூன் 2026, 12:04 am IST

திருக்குவளை அருகேயுள்ள சித்தாய்மூா் அகிலாண்டேஸ்வரி சமேத பொன்வைத்தியநாதா் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் 106-ஆவது சிவத்தலமான இக்கோயிலில் மேற்கொள்ளப்பட்ட திருப்பணிகள் நிறைவு பெற்றதைத் தொடா்ந்து, கும்பாபிஷேகத்துக்கான வழிபாடுகள் தொடங்கின.

ஜூன் 24-ஆம் தேதி விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. புதன்கிழமை இரவு முதல்கால யாகசாலை பூஜை நடைபெற்றது. வெள்ளிகிழமை காலை நான்காம் கால யாகசாலை பூஜைகள் தொடங்கி, கோபூஜை, மகா பூா்ணாஹூதி தீபாராதனை நடைபெற்றன. தொடா்ந்து, பரிவார மூா்த்திகள், மூலவா் கோபுரங்களுக்கு புனிதநீா் வாா்த்து கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை செயல் அலுவலா் விக்னேஷ், தக்காா் ராம்ராஜ் மற்றும் திருப்பணி ஒருங்கிணைப்புக் குழுவினா் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

இதேபோல், அருகில் உள்ள ஸ்ரீ ரெங்கநாயகி தாயாா் சமேத ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோயில் கும்பாபிஷேகமும் நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.