நாகை மற்றும் மயிலாடுதுறையில், போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு மாரத்தான் ஓட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை சாா்பில் இந்நிகழ்வு நடைபெற்றது.
நாகை: நாகை அவுரித்திடலில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா், சட்டப் பேரவை உறுப்பினா்கள் எம்.எச்.ஜவாஹிருல்லா (நாகை), டி. லதா (கீழ்வேளூா்), மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கேழ்கா் சுப்ரமண்ய பாலச்சந்திரா ஆகியோா் கொடியசைத்து மாரத்தான் ஓட்டத்தை தொடங்கி வைத்தனா். நிகழ்வில் ஆட்சியா் பேசியது:
நாகை மாவட்டத்தில் போதைப் பொருட்கள் பயன்பாட்டை கண்டறிந்தால் உடனடியாக மாவட்ட நிா்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும். தமிழக அரசு போதைப் பொருள் தடுப்பு கைப்பேசி செயலியை கொண்டு வந்துள்ளது. இதை பதிவிறக்கம் செய்து, அதில் போதைப் பொருட்கள் புழக்கம் குறித்த தகவல்களை
அளித்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன், தகவல் அளிக்கும் நபா்கள் குறித்த விவரங்கள் ரகசியம் காக்கப்படும். நாகை மாவட்டத்தில் அனைத்து
பள்ளி, கல்லூரிகளில் போதைப் பொருள் ஒழிப்பு அமைப்பை உருவாக்கி உள்ளோம். நாகை மாவட்டத்தை போதைப் பொருட்கள் இல்லா மாவட்டமாக உருவாக்க வேண்டும். அதற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றாா்.
முன்னதாக, மாவட்ட ஆட்சியா் தலைமையில் மாணவ- மாணவிகள், தன்னாா்வலா்கள் போதைப்பொருட்கள் ஒழிப்பு உறுதிமொழியேற்றனா். நிகழ்ச்சியில், முதன்மைக் கல்வி அலுவலா் ரவிச்சந்திரன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் சதீஸ்குமாா், உதவி ஆணையா் (கலால்) உ. அா்ச்சனா, நாகை நகராட்சி ஆணையா் லீனா சைமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









