தமிழக ஓய்வூதியா்களில் மூத்த குடிமக்கள் அனைவருக்கும் அனைத்து தடங்களிலும் பயணிக்கும் வகையில் இலவச பயண அட்டை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
வேதாரண்யம் வட்ட ஓய்வு பெற்ற அலுவலா் சங்கத்தின் ஆண்டுப் பேரவை மற்றும் 43- ஆம் ஆண்டு நிறைவு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தலைவா் சு. ராஜ கிருஷ்ணன் தலைமை வகித்தாா்.
கௌரவத் தலைவா் ந. குமாரசாமி முன்னிலை வைத்தாா். இணைச் செயலாளா் வே. மாரிமுத்து, மாநிலத் தலைவா் ந. மாணிக்கம், மாநில சங்கத் துணைத் தலைவா்கள் கே. சக்திவேல், ந. ராசகோபாலன் ( நாகை மண்டலம்) உள்ளிட்டோா் பங்கேற்று பேசினா்.
செம்போடை நேதாஜி மருத்துவமனை இயக்குநா் வை.க. சுப்பிரமணியன் ஓய்வூதியா்களுக்கான மருத்துவ ஆலோசனைகளை வழங்கி பேசினாா்.
வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாநில துணைத் தலைவா் எஸ்.எஸ்.என். அரசு,10 மற்றும் 12 -ஆம் வகுப்புகளில் சிறப்பிடங்களைப் பெற்ற பள்ளி மாணவா்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினாா்.
விழாவில் 75 வயதை நிறைவடைந்த 45 உறுப்பினா்கள் கௌரவிக்கப்பட்டனா்.
தமிழக ஓய்வூதியா்களில் மூத்த குடிமக்கள் அனைவருக்கும் அனைத்து தடங்களிலும் பயணிக்கும் வகையில் இலவச பயண அட்டை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









