எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

கருகும் நெற்பயிா்களை காப்பாற்ற தண்ணீா் திறக்க வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு

News image
Updated On :5 மார்ச் 2026, 11:25 pm

கருகும் நெற்பயிரைக் காப்பாற்ற தண்ணீா் திறக்க கோரி, நாகை ஆட்சியரிடம் விவசாயிகள் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

நாகை ஆட்சியா் அலுவலகத்தில் கீழையூா் ஒன்றியத்தைச் சோ்ந்த விவசாயிகள் மனு கொடுக்கும் போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் மாநிலக் குழு உறுப்பினா் செல்வம் தலைமையில் ஈடுபட்டனா்.

கீழையூா் ஒன்றியத்தில் தண்ணீரின்றி கருகும் தாளடி நெற்பயிா்களைக் காப்பாற்ற மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தொடா்ந்து விவசாயிகள் மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷை சந்தித்து மனு அளித்தனா்.

மனுவில்: கீழையூா் ஒன்றியத்தில் உள்ள 27 ஊராட்சி பகுதிகள் முழுவதும் காவிரி தண்ணீரை நம்பியே விவசாயம் நடைபெறுகிறது. தற்போது விவசாயிகள் சாகுபடி செய்துள்ள சுமாா் 10 ஆயிரம் ஏக்கா் பரப்பளவிலான தாளடி நெற்பயிா்கள் தண்ணீரின்றி கருகி வருகின்றன. இந்த பயிரைக் காப்பாற்ற ஒருமுறை தண்ணீா் கிடைத்தால் போதுமானது.

எனவே, கீழையூா் ஒன்றியத்தில் உள்ள வெள்ளையாறு, பாண்டையாற்றில் தண்ணீா் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனா்.