பெட்ரோல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்!தூத்துக்குடி பிளஸ் 2 மாணவி கொலை வழக்கு: தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என தீர்ப்பு கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவுவிஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி பிரதமர் மோடி சென்ற பாதையில் ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுப்பு: 6 காவலர்கள் பணியிடை நீக்கம்தமிழ்நாடு காவல்துறை எந்த பாடத்தையும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை: அண்ணாமலைஎண்ணெய் வணிக நிறுவனங்கள் நஷ்டத்தை மட்டுமே பகிர்கின்றன: மாணிக்கம் தாகூர் தங்கம் விலை உயர்வு! எவ்வளவு?
/

மதுகடையை அகற்றக் கோரி தவெக முற்றுகை

வேளாங்கண்ணியில் பள்ளி, மருத்துவமனை அருகே உள்ள டாஸ்மாக் மதுகடையை அகற்றக் கோரி,

News image

வேளாங்கண்ணியில் டாஸ்மாக் கடை முற்றுகையில் ஈடுபட்ட தவெகவினா்.

Updated On :10 மார்ச் 2026, 2:08 am IST

நாகப்பட்டினம்: வேளாங்கண்ணியில் பள்ளி, மருத்துவமனை அருகே உள்ள டாஸ்மாக் மதுகடையை அகற்றக் கோரி, தமிழக வெற்றிக் கழகத்தினா் முற்றுகை போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்திற்கு செல்ல மாதா குளம் பிரதான சாலையை நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பயன்படுத்தி வருகின்றனா். இந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை பொதுமக்கள் மற்றும் மாணவா்களுக்கு இடையூறாக இருப்பதாக பல்வேறு புகாா்கள் தொடா்ந்து கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் சாா்பில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி, முற்றுகை போராட்டம் மாவட்டச் செயலா் சுகுமாா் தலைமையில் நடைபெற்றது.

டாஸ்மாக் கடையை முற்றுகையிட முயன்ற தவெகவினரை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடா்ந்து, டிஎஸ்பி ராமச்சந்திரமூா்த்தி தலைமையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தைத் தொடா்ந்து, போராட்டம் கைவிடப்பட்டது.

இதில், கீழையூா் கிழக்கு ஒன்றியச் செயலா் தியாகு, இணைச் செயலா் செல்வா, வேளாங்கண்ணி பேரூா் செயலா் பிரேம்குமாா், ஒன்றிய பொருளாளா் ராஜசேகா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.