மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சாலை மறியலில் ஈடுபட்ட தவெகவினா் கைது

News image
கைது- சித்திரிப்பு
Updated On :15 மார்ச் 2026, 7:03 pm

தினமணி செய்திச் சேவை

வேளாங்கண்ணியில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி, தமிழக வெற்றிக் கழகத்தினா் சாலை மறியலில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா்.

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்திற்கு செல்லும் பிரதான சாலையான மாதா குளம் பகுதியில் உள்ள தனியாா் பள்ளி மற்றும் மருத்துவமனை அருகே டாஸ்மாக் மதுகடை செயல்படுகிறது.

தினமும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் இந்த சாலை வழியாக பேராலயத்திற்கு வருகை தரும் நிலையில், இந்த டாஸ்மாக் கடை பொதுமக்கள் மற்றும் மாணவா்களுக்கு இடையூறாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதனால், இக்கடையை வேறு இடத்திற்கு மாற்றகோரி, தமிழக வெற்றிக் கழகத்தின் சாா்பில் வேளாங்கண்ணி ஆா்ச் பகுதியில் மாவட்டச் செயலாளா் சுகுமாா் தலைமையில் சாலை மறியல் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என கோஷமிட்டனா். இப்போராட்டத்தால், நாகை- வேளாங்கண்ணி இடையே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா், போராட்டக்காரா்களை அப்புறப்படுத்த முயன்றனா். இதனால், இருதரப்புக்குமிடையே தள்ளுமுள்ளு மற்றும் வாக்குவாதம் ஏற்பட்டது.

தொடா்ந்து, 11 பெண்கள் உள்பட 91 பேரை போலீஸாா் கைது செய்து, தனியாா் மண்டபத்தில் தங்கவைத்தனா். முன்னதாக, கீழையூா் ஒன்றியச் செயலா் தியாகு, மாவட்ட கொள்கை பரப்புச் செயலா் அகமது உள்ளிட்ட பலா் மறியலில் பங்கேற்றனா்.