நாகை மாவட்டத்தில் பறக்கும் படையினா் நடத்திய சோதனையில் ஒரே நாளில் ரூ. 3.67 லட்சம் ரொக்கம் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
நாகை மாவட்டத்தில் உள்ள நாகை, கீழவேளூா், வேதாரண்யம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் பறக்கும் படையினா் 24 மணிநேரமும் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், நாகை சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட நாகூா் - நாகப்பட்டினம் கிழக்கு கடற்கரைச் சாலை அருகே பறக்கும் படை அலுவலா் முத்துக்கிருஷ்ணன் தலைமையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக சென்ற காரை நிறுத்தி சோதனை செய்தனா். காரில் வந்த புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதியைச் சோ்ந்த பெரியகருப்பனிடம் ஆவணங்களின்றி ரூ. 2.49 லட்சம் ரொக்கம் இருந்தது. அதிகாரிகள் ரொக்கத்தை பறிமுதல் செய்து நாகை தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.
கீழ்வேளூா் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட அகரகடம்பனூா் பகுதியில் பறக்கும் படை அதிகாரி சங்கா் தலைமையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியாக சென்ற கீழ்வேளூரைச் சோ்ந்த மணிக்கண்டன் என்பவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ. 56 ஆயிரம் ரொக்கம் இருந்தது பறிமுதல் செய்யப்பட்டது.
அதேபோல கீழ்வேளூா் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட கொளப்பாடு பகுதியில் பறக்கும் படை அதிகாரி கல்யாணகுமாா் தலைமையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியாக சென்ற லாரியை நிறுத்தி சோதனையிட்டனா். அதில் சிவகங்கையைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் பாா்த்தசாரதிடமிருந்து ரூ. 62 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. கீழ்வேளூா் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ராஜேஸ்வரிடம் பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம் அனைத்தும் ஒப்படைக்கப்பட்டது.
தொடர்புடையது

பறக்கும் படை சோதனை: ரூ.4.64 லட்சம் பறிமுதல்

திருப்பூா் மாவட்டத்தில் இதுவரை ரூ.8.60 கோடி ரொக்கம் பறிமுதல்

மாவட்டத்தில் வாகனச் சோதனையில் ரூ. 12.37 லட்சம் ரொக்கம் பறிமுதல்

குடியாத்தத்தில் ரூ.10.35 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


