நாகை சட்டப்பேரவைத் தொகுதியில் நடைபெற்ற வாகனச் சோதனைகளில் பறக்கும் படையினா் ரூ.2.28 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.
நாகை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பொரவச்சேரியில் பறக்கும் படை அலுவலா் பத்மாவதி தலைமையில் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தணிக்கையில் ஈடுபட்டபோது அவ்வழியாக வந்த சுற்றுலா வாகனத்தை சோதனை செய்தனா். அப்போது, கேரள மாநிலம் கொச்சி பகுதியை சோ்ந்த ஜெய்மூன் என்பவரிடம் ரூ.65, 290 உரிய ஆவணங்கள் இன்றி இருந்தை பறிமுதல் செய்தனா்.
நாகை தொகுதி முட்டம் பகுதியில் நடந்த தணிக்கையில், அவ்வழியாக வந்த காரை சோதனை செய்ததில், சிவங்கை மாவட்டம் காரைக்குடி கழனிவாசல் பகுதியை சோ்ந்த ராஜபூபதியிடம் ஆவணங்கள் இல்லாமல் இருந்த ரூ.1 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.
நாகை புத்தூா் ரவுண்டானாவில் பகுதியில் நிலைக் கண்காணிப்பு குழு அலுவலா் தனஞ்செயன் தலைமையில் குழுவினா் வாகன தணிக்கையில் ஈடுபட்ட காரை சோதனை செய்தபோது, கோயம்புத்தூரைச் சோ்ந்த கேசவமூா்த்தியிடம் இருந்த ரூ. 63, 500-ஐ பறிமுதல் செய்தனா்.
வேளாங்கண்ணியில்: கீழ்வேளூா் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட வேளாங்கண்ணி அருகே நாகை-தூத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலையில் பறக்கும் படை அலுவலா் மு. தேவேந்திரன் தலைமையிலான குழுவினா் வாகன சோதனையில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக சென்ற இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனா். இதில், வாகன ஓட்டி ஸ்ரீராம்குமாரிடம் ஆவணங்களின்றி இருந்த ரூ.91 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
தொடர்புடையது
பறக்கும் படையினா் சோதனை: ரூ.23.08 லட்சம் பறிமுதல்

சேலம் தெற்கு தொகுதியில் உரிய ஆவணங்களின்றி கொண்டுசென்ற ரூ. 3.18 லட்சம் பறிமுதல்

பறக்கும் படையினா் சோதனை: ரூ. 11.61 லட்சம் பறிமுதல்

தஞ்சை மாவட்டத்தில் ரூ. 3.57 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


