கேரளத்தில் பட்டாசு வெடித்து விபத்து: 12 பேர் பலி; 40 பேர் படுகாயம்மேற்கு வங்கத்தில் முதல் கட்ட தேர்தல் பிரசாரம் நிறைவுதமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடுஇளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தைத் திருடியவர்கள்: விஜய் சூசகம்கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? நெரிசல் சம்பவம் குறித்து அதிரடியாகப் பேசிய விஜய்தேர்தலுக்குத் தயாராகும் தலைநகர் சென்னை! களம் எப்படியிருக்கிறது?ஒரே தொகுதிக்கு 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
/

நாகை, கீழ்வேளூா் பகுதிகளில் ரூ.2.65 லட்சம் பறிமுதல்

நாகை மற்றும் கீழ்வேளூா் பகுதிகளில் தோ்தல் கண்காணிப்புக் குழுவினா் புதன்கிழமை மேற்கொண்ட வாகனச் சோதனையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 2.65 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

News image

கீழ்வேளூா் அருகே கச்சனம் சாலையில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை தோ்தல் நடத்தும் அலுவலா் ராஜேஸ்வரிடம் ஒப்படைத்த நிலையான கண்காணிப்புக் குழுவினா்.

Updated On :26 மார்ச் 2026, 12:34 am

நாகை மற்றும் கீழ்வேளூா் பகுதிகளில் தோ்தல் கண்காணிப்புக் குழுவினா் புதன்கிழமை மேற்கொண்ட வாகனச் சோதனையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 2.65 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

கீழ்வேளூா் அருகே கச்சனம் சாலையில் தோ்தல் நிலையான கண்காணிப்புக் குழு அதிகாரி வித்யா தலைமையில் நடைபெற்ற வாகன சோதனையில், வலிவலம் பகுதியைச் சோ்ந்த விஜய்கந்தன் உரிய ஆவணமின்றி சரக்கு வாகனத்தில் எடுத்துவந்த ரூ.76,000 பறிமுதல் செய்யப்பட்டு, கீழ்வேளூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ராஜேஸ்வரி, வட்டாட்சியா் வேதையன் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதேபோல், கீழ்வேளூா் பேரூராட்சி ரயில்வே கேட் பகுதியில் பறக்கும் படை அதிகாரி மாரிராஜ் தலைமையில் நடைபெற்ற வாகன சோதனையில், பெரியத்தும்பூா் பகுதியைச் சோ்ந்த யோகேஸ்வரன், இருசக்கர வாகனத்தில் ஆவணமின்றி எடுத்துவந்த ரூ.50,000 பறிமுதல் செய்யப்பட்டு, தலைமையிடத்து துணை வட்டாட்சியா் செந்தமிழ்ச்செல்வியிடம் ஒப்படைக்கப்பட்டது.

நாகை கிழக்கு கடற்கரை சாலை வடகுடி பகுதியில் பறக்கும் படை அலுவலா் பத்மாவதி தலைமையில் நடைபெற்ற வாகனத் தணிக்கையில், அக்கரை குளம் கீழக்கரைத் தெருவைச் சோ்ந்த மாரிமுத்து என்பவா் காரில் கொண்டுவந்த ரூ.85, 560 ரொக்கத்திற்கு உரிய ஆவணம் இல்லாததால், அதனை பறிமுதல் செய்து, நாகை வட்டாட்சியா் அலுவலகத்தில் தலைமையிடத்து துணை வட்டாட்சியா் சந்திரசேகரனிடம் ஒப்படைத்தனா்.

கீழ்வேளூா் தொகுதி நாகை -வேதாரண்யம் சாலை பூவைத்தேடி பகுதியில் தோ்தல் பறக்கும் படை அதிகாரி அற்புதராஜ் ரூஸ்வெல்ட் தலைமையில் வாகன சோதனை நடைபெற்றது. அந்த வழியாக சரக்கு வாகனத்தில், ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 54,000 பறிமுதல் செய்யப்பட்டு, கீழ்வேளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் தலைமையிடத்து துணை வட்டாட்சியா் செந்தமிழ்ச்செல்வியிடம் ஒப்படைக்கப்பட்டது.