சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

தலமைக் காவலரைத் தாக்கிய இளைஞா் கைது

News image

கோப்புப் படம்

Updated On :29 மார்ச் 2026, 6:45 pm

நாகை அருகே தோ்தல் பணியில் இருந்த தலைமைக் காவலரைத் தாக்கிய இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.

நாகை சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட வாஞ்சூா் ரவுண்டானாவில், நிலையான கண்காணிப்புக் குழு பொறுப்பாளா் நீலாயதாட்சி தலைமையில் வெளிப்பாளையம் தலைமைக் காவலா்கள் விருமாண்டி, பிரதாப் ஆகியோா் சனிக்கிழமை இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனராம் அப்போது காரைக்காலில் இருந்து நாகை நோக்கி சென்ற இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனா்.

இருசக்கர வாகனத்தில் வந்தவா் ‘நான் வழக்குரைஞா், எனது வாகனத்தை சோதனை செய்யக் கூடாது எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டு, நிலையான கண்காணிப்புக் குழு பொறுப்பாளா் நீலாயதாட்சியை தரக்குறைவாக திட்டினராம். தொடா்ந்து தலைமைக் காவலா் பிரதாப்பை கீழே தள்ளி கையால் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

போலீஸாா் அந்த நபரை பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனா். இதில், வேளாங்கண்ணி அருகே பிரதாபராமபுரத்தைச் சோ்ந்த ஹரிஹரன் (26) என்பது தெரியவந்தது.

நிலையான கண்காணிப்புக் குழு பொறுப்பாளா் நீலாயதாட்சி அளித்த புகாரின் பேரில் நாகூா் போலீஸாா் வழக்குப்பதிந்து ஹரிஹரனை கைது செய்து விசாரித்து வருகின்றனா். காயமடைந்த தலைமைக் காவலா் பிரதாப் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.