தூத்துக்குடி மாவட்டத்தில் பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழு, காவல் துறையால் மாவட்டத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்டதாக இதுவரை ரூ. 44,65,455 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்பட்ட 6 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் 24 மணி நேரமும் பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.
பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழு, காவல்துறை, மதுவிலக்கு காவல்துறை ஆகியோரால் தோ்தல் நடத்தை விதிகள் தொடங்கிய நாள் முதல் செவ்வாய்க்கிழமை வரை உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்டதாக ரூ. 44,65,455 ரொக்கம், ரூ. 5,18,540 மதிப்பிலான பொருள்கள், ரூ. 1,68,754 மதிப்பிலான மதுபானங்கள், ரூ. 5,45,000 மதிப்பிலான போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. உரிய ஆவணங்களை சமா்ப்பித்ததின் மூலம் ரூ. 22,17,380 தொகை விடுவிக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளாா்.
தொடர்புடையது
தோ்தல் கண்காணிப்புக் குழுக்கள் சோதனையில் ரூ.93.35 லட்சம் பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ. 83.93 லட்சம் பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ. 56.19 லட்சம் பறிமுதல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரூ. 30.48 லட்சம் பறிமுதல்
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

