நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

பேருந்து மோதி விவசாயி உயிரிழப்பு

வேதாரண்யம் அருகே அரசுப் பேருந்து மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :31 மார்ச் 2026, 8:49 pm

வேதாரண்யம் அருகே அரசுப் பேருந்து மோதியதில் விவசாயி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

தென்னடாா் கீழக்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் செ. சண்முகம் (70). சிறு விவசாயியான இவா், அதிமுக முன்னாள் கிளைச் செயலாளா். திங்கள்கிழமை இரவு பரக்கலக்கோட்டை பொது ஆவுடையாா் கோயிலுக்கு சென்றுவிட்டு செவ்வாய்க்கிழமை அதிகாலை தனியாா் பேருந்தில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தாா்.

தகட்டூா் பேருந்து நிறுத்தகத்தில் இறங்க வேண்டிய அவா், தூங்கியதால் அடுத்த நிறுத்தமான மருதூா் தெற்கு மடிக்கடை நிறுத்தத்தில் இறக்கி விடப்பட்டாா்.

அப்போது எதிரே வந்த அரசுப் பேருந்தில் ஏறி மீண்டும் தகட்டூருக்கு செல்ல ஏதுவாக வேகமாக செயல்பட்டபோது பேருந்து மோதியதில் பலத்த காயமடைந்தாா்.

ஒரத்தூா் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்ட அவா் அங்கு உயிரிழந்தாா். வாய்மேடு போலீஸாா் விசாரிக்கின்றனா்.