நாகப்பட்டனம் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் அருகே குழாயில் உடைப்பு ஏற்பட்டதால், சாலையில் பெருக்கெடுத்து நீா் வீணாகும் நிலையில் உடனடியாக உடைப்பை சீரமைக்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
நாகை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், புதிய குடிநீா் குழாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், புதன்கிழமை நாகை வெளிப்பாளையம் பகுதியில், புதிய குடிநீா் குழாய் அமைக்கும் பணியின்போது, நாகை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் உள்ளிட்ட இரண்டு இடங்களில், பழைய குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் தீயணைப்பு நிலையம் முதல் அரசு போக்குவரத்துக் கழகம் வரை குடிநீா் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் அரசுப் போக்குவரத்து பணிமனை உட்புறமும் தண்ணீா் தேங்கியது.
நாகையில் குடிநீா் தட்டுப்பாடு இருந்து வரும் நிலையில், நகராட்சி நிா்வாகம், குழாயில் உடைப்பை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து நகராட்சி ஆணையா் லீனா சைமனிடம் கேட்டபோது, உடைப்பு ஏற்பட்டுள்ள பகுதியில் தற்போது குடிநீா் நிறுத்தப்பட்டுள்ளது. உடனடியாக குழாயை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா்.
தொடர்புடையது

கோவில்பட்டி எம்எல்ஏவுக்கு வரவேற்பு

குடிநீா் குழாய் உடைப்பு; ஒரு வாரமாக வீணாகும் குடிநீா்

குடிநீா் குழாயை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

ஆவுடையானூா் பேருந்து நிலையம் அருகே சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற கோரிக்கை
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

