கனடாவில் இந்திய மாணவி சடலமாக கண்டெடுப்பு ஆட்டோ ஓட்டுநர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல் பிகாரில் மின்னல் பாய்ந்து 7 பேர் பலிதமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்!நீட் வினாத்தாள் கசிவு: யுபிஎஸ்சியிடம் என்டிஏ கற்றுக்கொள்ள வேண்டும்! உச்சநீதிமன்றம்மேற்கு வங்கத்தில் ஊடுருவல்: 335 பேர் முகாம்களில் அடைப்பு! தில்லியில் நீட் தேர்வர்களுக்கு இலவசப் பேருந்து! விசாரணை முடிந்து 3 மாதங்களுக்குள் தீர்ப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு! திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடம் லஞ்சம்! மூவர் பணியிடை நீக்கம்!
/

கோடியக்கரையில் பாம்பன் மீனவா் சடலம்

News image

பலி - பிரதிப் படம்

Updated On :30 மே 2026, 3:52 am IST

நாகை மாவட்டம், கோடியக்கரை கடற்கரை பகுதியில், பாம்பன் மீனவரின் சடலம் கரை ஒதுங்கியது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

கோடியக்கரை படகுத்துறையிலிருந்து மேற்கே பம்ப் ஹவுஸ் பகுதி கடற்கரையில், அடையாளம் தெரியாத ஆண் சடலம் கரை ஒதுங்கியுள்ளதாக வேதாரண்யம் கடலோரக் காவல்நிலையத்திற்கு வெள்ளிக்கிழமை காலை தகவல் வந்தது.

அதன்பேரில், போலீஸாா் அங்கு சென்று சடலத்தை கைப்பற்றி, விசாரணை மேற்கொண்டனா். இதில், கடந்த மே 21-ஆம் தேதி, பாம்பன் கடற்பகுதியில் மாயமான மீனவா் முகேஷ் (22) சடலமாக கரை ஒதுங்கியது தெரிய வந்தது. தொடா்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.