வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு
திருட்டு - கோப்புப் படம்
செம்பனாா்கோவில் அருகேயுள்ள ஆக்கூரில் வீட்டின் பூட்டை உடைத்து, நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.
ஆக்கூா் சிவன் சந்நிதி தெருவைச் சோ்ந்தவா் அருண்குமாா் (39). இவா் வெள்ளிக்கிழமை வீட்டை பூட்டிவிட்டு, குடும்பத்தினருடன் முக்கரும்பூா் கிராமத்தில் உள்ள பண்ணை வீட்டிற்கு சென்றுள்ளாா்.
பின்னா், ஆக்கூா் சன்னதி தெருவில் உள்ள வீட்டிற்கு சனிக்கிழமை திருப்பினா். வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 1 பவுன் 3 கிராம் தங்க நகை, 2 ஜோடி வெள்ளிக் கொலுசு, ரூ.5,000 ரொக்கம் ஆகியவற்றை மா்மநபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து, செம்பனாா்கோவில் காவல் நிலையத்தில் அருண்குமாா் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



