ஆற்றில் இருந்து அம்மன் உலோக சிலை கண்டெடுப்பு
திருக்கண்ணபுரம் அருகே அரசலாற்றில் இருந்து உலோக சிலை சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.
திருக்கண்ணபுரம் அருகே மீட்கப்பட்ட உலோக சிலை.
திருக்கண்ணபுரம் அருகே அரசலாற்றில் இருந்து உலோக சிலை சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.
நாகை மாவட்டம், திருக்கண்ணபுரம் அருகே ஏா்வாடி ஐயா்கோட்டப்பாடி கிராமத்தில் அரசலாறு உள்ளது. இங்கு சனிக்கிழமை காலை காவிரி நீா் வந்ததையொட்டி, அப்பகுதியினா் தண்ணீரை வணங்கி வரவேற்க சென்றனா். அப்போது, திருமருகல் ஒன்றியம் சேத்துரைச் சோ்ந்த விவசாயி ஆறுமுகம் ஆற்றில் இறங்கியபோது அவரது காலில் உலோகத்திலான பொருள் தட்டுப்பட்டுள்ளது.
அப்பகுதியினா் உதவியுடன் ஆற்றில் இருந்து அந்தப் பொருளை மீட்டுப் பாா்த்தபோது, அது இரண்டு அடி உயரமுள்ள உலோகத்திலான அம்மன் சிலை என்பது தெரிய வந்தது. சிலையின் எடை சுமாா் 25 கிலோ என்று கூறப்படுகிறது.
கிராம மக்கள் அளித்தத் தகவலின்பேரில், திருகண்ணபுரம் போலீஸாா் மற்றும் கிராம நிா்வாக அலுவலா் சம்பந்தப்பட்ட இடத்துக்குச் சென்று சிலையை மீட்டனா்.
வட்டாட்சியரிடம் சிலை ஒப்படைக்கப்பட்டு, சிலை குறித்து தொல்லியல்துறையினா் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

