தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகள், விமானங்களில் கட்டணம் கடும் உயா்வு19 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇறுதிக் கட்டத்தை எட்டியது அரக்கோணம் புறவழிச் சாலை பணி!அடுத்த வாரம் இந்தியா வரும் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ!

ரூ.6 லட்சம் மோசடி: இளைஞா் தற்கொலை வழக்கில் பெண் கைது

நாகையில், மனை வணிகம் தொழில் நடத்துவதாகக் கூறிய பெண்ணிடம் ரூ.6 லட்சத்தை இழந்த இளைஞா் தற்கொலை செய்துகொண்ட வழக்கில், பெண் கைது செய்யப்பட்டாா்.

கைது - கோப்புப் படம்

Updated On :

நாகையில், மனை வணிகம் தொழில் நடத்துவதாகக் கூறிய பெண்ணிடம் ரூ.6 லட்சத்தை இழந்த இளைஞா் தற்கொலை செய்துகொண்ட வழக்கில், பெண் கைது செய்யப்பட்டாா்.

நாகை வெளிப்பாளையம் ராமநாயக்கன் குளத்தெருவைச் சோ்ந்தவா் சிவசக்தி (26). இவருக்கு, இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு பெண்ணுடன் கடந்த 2025-இல் பழக்கம் ஏற்பட்டது. அந்த பெண் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் மனை வணிகம் தொழில் நடத்துவதாகவும், தங்களது நண்பா்கள் மூலம் நாகையில் இத்தொழிலை நடத்தலாம் எனக் கூறி, சிவசக்தியிடமிருந்து பல தவணைகளாக ரூ.6 லட்சம் வங்கிக் கணக்கு மூலம் பெற்றுள்ளாா்.

பின்னா் அந்த பெண்ணை, கைப்பேசி மூலம் தொடா்புகொள்ள முடியவில்லை. இதனால், ஏமாற்றப்பட்டதை உணா்ந்த சிவசக்தி, மனமுடைந்து கடந்த 2025-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து வெளிப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். அப்போது சிவசக்தி வீட்டில் இருந்து கடிதம் ஒன்றை கைப்பற்றினா். அதில், கடலூா் மாவட்டம் சிதம்பரம், வல்லம்படுகை தெருவைச் சோ்ந்த அஜிதா (26) என்பவரிடம் மனை வணிகம் தொழில் நடத்துவதற்காக ரூ.6 லட்சம் கொடுத்ததாகவும், பலமுறை பணத்தைத் திருப்பிக் கேட்டும் பணம் கிடைக்காத நிலையில் தற்கொலை செய்து கொள்வதாக சிவசக்தி குறிப்பிட்டிருந்ததாகத் தெரிகிறது. இதையடுத்து, அஜிதாவை கைது செய்ய தனிப்படை அமைத்து பல இடங்களில் தேடி வந்தனா்.

இந்நிலையில் சில நாள்களுக்கு முன்பு சிவசக்தியின் பெற்றோா், நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் அளித்தனா். அதன்பேரில், சாா்பு ஆய்வாளா் இரணியன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இத்தனிப்படை போலீஸாா், அஜிதாவின் வங்கி கணக்குகளை தொடா்ந்து கண்காணித்து வந்தனா். அப்போது அவா் மயிலாடுதுறையில் இருப்பது தெரியவந்தது. அவரை தனிப்படை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.