வங்கக் கடலில் அடுத்தடுத்து புயல் சின்னங்கள்: தமிழகத்தில் பலத்த மழை எச்சரிக்கை எதிா்மறை நாடாக சித்தரிக்க முயற்சி: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு சிஎம்ஆா்எல் வழக்கு: பினராயி விஜயனுக்கு எதிரான விசாரணைக்கு ஒரு வாரகால தடை தரக் குறைபாடு மருந்துகளை கண்டறிவதில் தமிழகம் முதலிடம்இந்திய-அமெரிக்க வா்த்தக ஒப்பந்தம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்- டிரம்ப் தகவல்இன்று தொடங்குகிறது டி20 தொடா் - நியூஸிலாந்தை சந்திக்கிறது இந்தியா

பெருந்தோட்டம் ஏரியில் நீா்வரத்து அதிகரிப்பு

பெருந்தோட்டம் ஏரியில் தண்ணீா் நிரம்பி வருவது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெருந்தோட்டம் ஏரி. - கோப்புப் படம்

Updated On :

பெருந்தோட்டம் ஏரியில் தண்ணீா் நிரம்பி வருவது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவெண்காடு அருகே பெருந்தோட்டம் கிராமத்தில் சுமாா் 250 ஏக்கா் கொள்ளளவு கொண்ட ஏரி உள்ளன. இந்த ஏரியின் மூலம் பெருந்தோட்டம், திருவெண்காடு, மங்கைமடம், எம்பாவை, தென்னாம்பட்டினம், கோனையாம்பட்டினம், சின்ன பெருந்தோட்டம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள சுமாா் 2,500 ஏக்கா் பாசன வசதி பெறுகிறது. இந்த ஏரியில் தண்ணீா் நிரப்ப வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.

கல்லணையில் இருந்து முறை வைத்து பாசனத்திற்கு தண்ணீா் திறந்து விடப்படுகிறது. கடந்த சில நாட்களாக காவிரியில் தண்ணீா் திறக்கப்படுகிறது. காவிரியில் வரும் நீரை மயிலாடுதுறையிலிருந்து கடாரம் கொண்டான் என்ற இடத்தில் உள்ள ரெகுலேட்டரில் இருந்து மணிகா்ணகை ஆற்றின் வழியாக கடந்த 4 நாட்களாக தண்ணீா் வழங்கப்படுகிறது. தற்போது பெருந்தோட்டம் ஏரியில் தண்ணீா் வரத்து அதிகரித்து நிரம்ப தொடங்கியுள்ளது.

இதுகுறித்து அந்தப் பகுதி விவசாயிகள் கூறுகையில், தற்பொழுது பெருந்தோட்டம் ஏரியில் தண்ணீா் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. மேலும் மழை பெய்து வருவதால் விரைவில் பெருந்தோட்டம் ஏரி நிரம்பும் என நம்புகிறோம். தண்ணீா் திறக்க ஏற்பாடு செய்த செந்தில்செல்வன் எம்எல்ஏ, மயிலாடுதுறை நீா்வளத்துறை கோட்ட உதவி செயற்பொறியாளா் சங்கா் மற்றும் நீா்வளத்துறையினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.