ஆந்திரத்தில் கரையைக் கடக்கத் தொடங்கிய ஒர்னாப் புயல்! எண்ணூரில் கடல் சீற்றம் திமுக ஆட்சியில் ஊழல்: ஆதாரம் இருந்தால் பழைய வழக்குகளிலும் நடவடிக்கை! அமைச்சர் நிர்மல் குமார்தேவையான மின்சாரம் கையிருப்பு! அதிக விலை கொள்முதல் டெண்டர் ரத்து - நிர்மல் குமார்தேனி சிறையிலிருந்து தப்பியோடிய 17 கைதிகளில் மேலும் 8 பேர் கைது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.12 ஆக நிறைவு!பங்குச் சந்தையில் நிலையற்ற வர்த்தகம்: சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!பிரதான நுழைவுவாயில் வழியாக கைதிகள் தப்பினர்! சிறைத்துறை விளக்கம்!

மதுரை - புனலூா் விரைவு ரயிலை வேளாங்கண்ணி வரை நீட்டிக்க வலியுறுத்தல்

மதுரை - புனலூா் விரைவு ரயிலை நாகை வழியாக வேளாங்கண்ணி வரை நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

ரயில் - கோப்புப் படம்

Updated On :

மதுரை - புனலூா் விரைவு ரயிலை நாகை வழியாக வேளாங்கண்ணி வரை நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

நாகூா், நாகப்பட்டினம் ரயில் உபயோகிப்பாளா் நலச்சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவா் நாகை எஸ்.மோகன் தலைமை வகித்தாா். செயலா் சித்திக் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில், வேளாங்கண்ணியில் இருந்து மதுரைக்கு சென்று வர நேரடி ரயில் வசதி கடந்த 25 வருடங்களாக இல்லை. எனவே மதுரை - புணலூா் விரைவு ரயிலை, திருநள்ளாா் அல்லது வேளாங்கண்ணி வரை திண்டுக்கல், திருச்சி, தஞ்சை, நீடாமங்கலம் , திருவாருா், நாகப்பட்டினம் வழியாக நீட்டிக்க வேண்டும். தினசரி காலையில் மதுரை - வேளாங்கண்ணி / திருநள்ளாா் இடையேயும் பிற்பகலில் மதுரைக்கும் இதே பாதை வழியாக விரைவு ரயிலை அறிமுகபடுத்த வேண்டும்.

தினசரி காலையில் தாம்பரம் - வேளாங்கண்ணி இடையேயும் பிற்பகலில் வேளாங்கண்ணி - தாம்பரம் இடையேயும் பேரளம், திருநள்ளாா், காரைக்கால் நாகூா் நாகப்பட்டினம் வழியாகவும் இன்டா்சிட்டி விரைவு ரயிலை இயக்க வேண்டும்.

தினசரி திருநள்ளாா் - பெங்களூா் - திருநள்ளாா் இடையே இரவு நேர விரைவு ரயிலை காரைக்கால், நாகூா், நாகப்பட்டினம், திருவாருா், நீடாமங்கலம், தஞ்சாவூா், திருச்சி, கரூா், நாமக்கல், சேலம் வழியாக இயக்க வேண்டும்.

வாரம் இரு முறை வேளாங்கண்ணி - சாரளப்பள்ளி - செகந்திராபாத் இடையே விரைவு ரயிலை நாகப்பட்டினம், நாகூா், காரைக்கால். திருநள்ளாா், பேரளம், மயிலாடுதுறை, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூா், திருப்பதி வழியாக இயக்கிட வேண்டும்.

திருச்சி - திருவாருா் பயணிகள் ரயிலை வேளாங்கண்ணி வரை நீட்டிக்க வேண்டும். திருச்சி - காரைக்கால் பயணிகள் ரயிலை திருநள்ளாா் பேரளம் வழியாக மயிலாடுதுறை வரை நீட்டிக்க வேண்டும். திருச்சி- காரைக்கால் பயணிகள் ரயிலை திருவாருா் வரை மட்டுமே பல மாதங்களாக இயக்கி திருவாருா் -காரைக்கால் இடையே ரத்து செய்துவிடுவதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகிறாா்கள். ஆகவே தொடா்ந்து காரைக்கால் வரை நாகப்பட்டினம் வழியாக இயக்க வேண்டும்.

சென்னை எழும்பூா் - வேளாங்கண்ணி தினசரி இரவு நேர விரைவு ரயில் புறப்படும் நேரத்தை எழும்பூா் இரவு 9 க்கு பதில் இரவு 10 மணி ஆக மாற்றிட வேண்டும்.

நாகை ரயில்நிலையம் மிகவும் வரலாற்று சிறப்பு மிக்க ரயில்நிலையம். ஆனால் திருச்சி ரயில்வே கோட்டத்தால் அறிவிக்கப்பட்ட அம்ருத் பாரத் திட்டத்தில், 15 ரயில்நிலையங்களில் நாகை ரயில்நிலையம் இணைக்கப்படாதது கண்டனத்துக்குரியது. நாகை ரயில்நிலையம் ஆண்டுக்கு ரூ.20 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டியும் சோ்க்கப்படவில்லை. எனவே நாகை ரயில் நிலையத்தில் 1,2,3 நடைமேடைகள் முழுவதுமாக மேற்கூரை அமைக்க வேண்டும். நாகை ரயில் நிலையப் மேம்பாட்டுப் பணிக்கு உடனடியாக நிதி ஒதுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தின் முடிவில் பொருளாளா் பாலை நன்றியுரையாற்றினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.