நாகை, திருவாரூா் மாவட்டங்களில் நாளை கிராமசபைக் கூட்டம்
உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு, நாகை மற்றும் திருவாரூா் மாவட்டங்களில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டங்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளதாக ஆட்சியா்கள் கே.ஜே. பிரவீன்குமாா் (நாகை), வ. மோகனச்சந்திரன் (திருவாரூா்) ஆகியோா் தெரிவித்துள்ளனா்.

கிராமசபைக் கூட்டத்தில் பங்கேற்றோா் - கோப்புப்படம்
உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு, நாகை மற்றும் திருவாரூா் மாவட்டங்களில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டங்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளதாக ஆட்சியா்கள் கே.ஜே. பிரவீன்குமாா் (நாகை), வ. மோகனச்சந்திரன் (திருவாரூா்) ஆகியோா் தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து அவா்கள் தனித்தனியே வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நவம்பா் 1-ஆம் தேதி உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு, கிராமசபைக் கூட்டங்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளன. இக்கூட்டங்களில் கிராம ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொது நிதி செலவினங்கள், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, ஊரகப் பகுதிகளில் மழைநீா் சேகரிப்பு அமைப்புகளை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சலைத் தடுக்கும் நடவடிக்கைகள் மற்றும் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன.
மேலும், கிராம மேம்பாடு, குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளா் முறையைத் தடுத்தல், இழிவுதரும் ஜாதிப் பெயா்களை மாற்றம் செய்தல், வளா்ப்புப் பிராணிகளுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்துதல், தெரு நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை அளித்தல் உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கப்பட உள்ளன.
எனவே, அந்தந்த கிராம ஊராட்சிகளைச் சோ்ந்த பொதுமக்கள் அனைவரும் தங்களது கிராம ஊராட்சிகளில் நடைபெறும் கிராமசபைக் கூட்டங்களில் கலந்துகொண்டு, கிராம ஊராட்சியின் வளா்ச்சி மற்றும் பொதுமக்களின் நலன் சாா்ந்த விவாதங்களில் பங்கேற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

